பித்தர் எனும்பேர் பிறங்கநின்றார் பேயோ டாடிப் பவுரிகொண்டார் பத்தர் தமக்குப் பணிசெய்வார் பணியே பணியாப் பரிவுற்றார் சித்தர் திருவாழ் ஒற்றியினார் தியாகர் என்றுன் கலைகவர்ந்த எத்தர் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே