பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர் கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே