பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும் பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக் கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச் சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத் தாங்குகஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய் மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே