பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான் பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய் திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும் திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம் சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே