பிரிந்தினிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப் பேசினும் நெய்விடுந் தீப்போல் எரிந்துளங் கலங்கி மயங்கல்கண் டிலையோ எங்கணும் கண்ணுடை எந்தாய் புரிந்தசிற் பொதுவில் திருநடம் புரியும் புண்ணியா என்னுயிர்த் துணைவா கரந்திடா துறுதற் கிதுதகு தருணம் கலந்தருள் கலந்தருள் எனையே கருகி - முதற் பதிப்பு, பொ சு, பி இரா, ச மு க கரைந்திடாது - முதற்பதிப்பு, பொ சு, ச மு க