பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த் திடுகின்றீர் பேய ரேநீர் இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம் மதித்தீரோ இரவில் தூங்கி மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால் நும்மனத்தை வயிரம் ஆன சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர் ஏன்பிறந்து திரிகின் றீரே