பிறந்து முன்னர்இவ் வுலகினாம் பெண்டு பிள்ளை ஆதிய பெருந்தொடக் குழந்தே இறந்து வீழ்கதி இடைவிழுந் துழன்றே இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம் மறந்து விட்டனை நெஞ்சமே நீதான் மதியி லாய்அது மறந்திலன் எளியேன் துறந்து நாம்பெறும் சுகத்தினை அடையச் சொல்லும் வண்ணம்நீ தொடங்கிடில் நன்றே
பிறந்து பிறந்துழன் றேனை - என்றும் பிறவா திறவாப் பெருமைதந் தூனைச் சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி