பிறவிக் கண்ணிலான் கைக்கொளும் கோலைப் பிடுங்கி வீசுதல் பெரியவர்க் கறமோ மறவிக் கையறை மனத்தினேன் உம்மேல் வைக்கும் அன்பைநீர் மாற்றுதல் அழகோ உறஇக் கொள்கையை உள்ளிரேல் இதனை ஓதிக் கொள்ளிடம் ஒன்றிலை கண்டீர் நறவிக் கோங்கிய ஒற்றியம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின் றீரே