பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த பெருந்தகைஎம் பெருமான் தன்னைச் செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப் பெருங்களிப்புச் செய்தான் தன்னை முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு கொடுத்தெனக்கு முன்னின் றானை அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ