பிறைமுடித் தாண்டொரு பெண்முடித் தோர்பிள்ளைப் பேர்()முடித்த நிறைமுடித் தாண்டவஞ் செவ்வேணி செய்திட நித்தமன்றின் மறைமுடித் தாண்டவஞ் செய்வோய்என் பாலருள் வைத்தெளியேன் குறைமுடித் தாண்டுகொள் என்னே பலமுறை கூறுவதே