பிறையாறு கொண்டசெவ் வேணிப் பிரான்பதப் பேறடைவான் மறையாறு காட்டுநின் தண்ணரு ளேயன்றி மாயைஎன்னும் நிறையாறு சூழுந் துரும்பாய்ச் சுழலும்என் நெஞ்சினுள்ள குறையாறு தற்கிடம் வேறில்லை காண்இக் குவலையத்தே