பிழைஅலதொன் றறியாத சிறியேன்முன் புரிந்த பெருந்தவமோ திருவருளின் பெருமையிதோ அறியேன் மழைஎனநின் றிலகுதிரு மணிமிடற்றில் படிக வடந்திகழ நடந்துகுரு வடிவதுகொண் டடைந்து விழைவினொடென் எதிர்நின்று திருநீற்றுக் கோயில் விரித்தருளி அருண்மணப்பூ விளக்கம்ஒன்று கொடுத்தாய் குழைஅசையச் சடைஅசையக் குலவுபொன்னம் பலத்தே கூத்தியற்றி என்னைமுன்னாட் கொண்டசிவக் கொழுந்தே