பிழைபு ரிந்தனன் ஆகிலும் உமது பெருமை நோக்கில்அப் பிழைசிறி தன்றோ மழைபு ரிந்திடும் வண்கையை மாற்ற மதிக்கின் றோர்எவர் மற்றிலை அதுபோல் உழைபு ரிந்தருள் வீர்எனில் தடுப்பார் உம்பர் இம்பரில் ஒருவரும் இலைகாண் புழைபு ரிந்தகை உலவொற்றி உடையீர் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ டீயஉம -------------------------------------------------------------------------------- நெஞ்சறிவுறூஉ திருவொற்றியூர் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்