பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான் ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும் ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே