புகழே விரும்பிப் புலன்இழந்தேன் போந்துன் பதத்தைப் போற்றுகிலேன் இகழேன் எனைநான் ஒற்றிஅப்பா என்னை மதித்தேன் இருள்மனத்தேன் திகழ்ஏழ் உலகில் எனைப்போல்ஓர் சிறியர் அறியேன் தீவினையை அகழேன்எனினும் எனையாளா தகற்றல் அருளுக் கழகன்றே