புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான் புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர் உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே