புகுவா னவர்தம் இடர்முழுதும் போக்கும் கதிர்வேல் புண்ணியனே மிகுவான் முதலாம் பூதம்எலம் விதித்தே நடத்தும் விளைவனைத்தும் தகுவான் பொருளாம் உனதருளே என்றால் அடியேன் தனைஇங்கே நகுவான் வருவித் திருள்நெறிக்கே நடத்தல் அழகோ நவிலாயே