பாடல் எண் :1211
புண்ணிய னேஎமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள்அளிக்கும்
திண்ணிய னேநற் சிவஞான நெஞ்சில் தெளிந்தஅருள்
அண்ணிய னேகங்கை ஆறமர் வேணியில் ஆர்ந்தமதிக்
கண்ணிய னேபற் பலவாகும் அண்டங்கள் கண்டவனே
பாடல் எண் :2570
புண்ணிய ராகிய கண்ணிய ராய்த்தவம்
பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு - மங்களம்
பாடல் எண் :5682
புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய்
புண்ணியம் புகல்அரி தென்றாள்
தண்ணிய மதியின் அமுதெனக் களித்த
தயவைநான் மறப்பனோ என்றாள்
எண்ணிய அனைத்தும் ஈந்தருள் கின்றான்
என்னையோ என்னையோ என்றாள்
அண்ணிய பேரா னந்தமே வடிவம்
ஆயினாள் நான்பெற்ற அணங்கே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.