புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர் பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய் பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தாடுஞ் சபையைப் பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே