புண்ணியமோர் போதும் புரிந்தறியாப் பொய்யவனேன் எண்ணியதோர் எண்ணம் இடர்இன்றி முற்றியிட உண்ணிலவு நல்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய தண்ணிலவு தாமரைப்பொன் தாள்முடிவில் கொள்ளேனோ