புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும் பெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப் பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண் மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம் மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால் கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக் கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே கட்டளைக் கலிப்பா