புண்படா உடம்பும் புரைபடா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்திக் கண்படா திரவும் பகலும்நின் தனையே கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன் உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் எனது நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே