புதியன் என்றெனைப் போக்குதி ரோநீர் பூரு வத்தினும் பொன்னடிக் கடிமைப் பதிய வைத்தனன் ஆயினும் அந்தப் பழங்க ணக்கினைப் பார்ப்பதில் என்னே முதியன் அல்லன்யான் எப்பணி விடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் துதிய தோங்கிய ஒற்றியூர் உடையீர் தூய மால்விடைத் துவசத்தி னீரே