புதியேன் அல்லேன் நின்அடிமைப் பொருத்தம் இல்லேன் அல்லேன்யான் மதியேன் வேற்றுத் தேவர்தமை வந்தங் கவர்தாம் எதிர்படினும் துதியேன் நின்னை விடுவேனோ தொண்ட னேனை விடல்அழகோ நதியேர் சடையோய் இன்னருள்நீ நல்கல் வேண்டும் நாயேற்கே