புன்கண் அகற்றும் மெய்யடியார் போற்றும் பொன்னம் பலநடுவே வன்கண் அறியார் திருநடஞ்செய் வரதர் அமுதத் திருமுகத்தை முன்கண் உலகில் சிறியேன்செய் முழுமா தவத்தால் கண்டேன்நான் என்கண் அனையார் அவர்முகத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ