புன்னை இதழிப் பொலிசடையார் போக யோகம் புரிந்துடையார் மன்னும் விடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன் உன்னும் உடலம் குளிர்ந்தோங்க உவகை பெருக உற்றுநின்ற என்னை விழுங்கும் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே