புன்புலைய வஞ்சகர்பால் சென்று வீணே புகழ்ந்துமனம் அயர்ந்துறுகண் பொருந்திப் பொய்யாம் வன்புலைய வயிறோம்பிப் பிறவி நோய்க்கு மருந்தாய நின்அடியை மறந்தேன் அந்தோ இன்புலைய உயிர்கொள்வான் வரில்என் பால்அவ் வியமனுக்கிங் கென்சொல்கேன் என்செய் கேனே தன்புகழ்காண் அருந்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே