புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப் புகன்றசொல் அன்றுநும் பொன்னடி கண்ட சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காணச் சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன் தன்மார்க்கத் தென்னுடல் ஆதியை நுமக்கே தந்தனன் திருவருட் சந்நிதி முன்னே என்மார்க்கத் தெப்படி யேனுஞ்செய் கிற்பீர் எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே