புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப் பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர் சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார் சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம் மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார் வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார் என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே