புயலானை மழையானை அதிர்ப்பி னானைப் போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச் செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத் திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே அயலானை உறவானை அன்பு ளானை அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி இயலானை எழிலானைப் பொழிலா னானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே