புயல்சூ ழொற்றி யுடையீரென் புடையென் குறித்தோ போந்ததென்றேன் கயல்சூழ் விழியாய் தனத்தவரைக் காண லிரப்போ ரெதற்கென்றார் மயல்சூழ் தனமிங் கிலையென்றேன் மறையா தெதிர்வைத் திலையென்ற லியல்சூ ழறமன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ