புரிகின்ற வீட்டகம் போந்தடி பட்டுப் புறங்கடையில் திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம்என் பாவிச் சிறுபிழைப்பைச் சொரிகின்ற புண்ணில் கனலிடல் போலெணுந் தோறுநெஞ்சம் எரிகின்ற தென்செய்கு வேன்பிறை வார்சடை என்னமுதே