புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம் புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில் துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம் துலங்கவும் திருவருட் சோதிப் பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே