புரிவேன் விரதம் தவந்தானம் புரியா தொழிவேன் புண்ணியமே பரிவேன் பாவம் பரிவேன்இப் பரிசால் ஒன்றும் பயன்காணேன் திரிவேன் நினது புகழ்பாடிச் சிறியேன் இதனைத் தீர்வேனேல் எரிவேன் எரிவாய் நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே