புரைசேரும் நெஞ்சப் புலையனேன் வன்காமத் தரைசேரும் துன்பத் தடங்கடலேன் வெம்பிணியை விரைசேரும் கொன்றை விரிசடையாய் விண்ணவர்தம் அரைசேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே