புற்றோங்கும் அரவமெல்லாம் பணியாக் கொண்டு பொன்மேனி தனில்அணிந்த பொருளே மாயை உற்றோங்கு வஞ்சமனக் கள்வ னேனை உளங்கொண்டு பணிகொள்வ துனக்கே ஒக்கும் மற்றோங்கும் அவரெல்லாம் பெருமை வேண்டும் வன்மனத்தர் எனைவேண்டார் வள்ள லேநான் கற்றோங்கும் அறிவறியேன் பலவாச் சொல்லும் கருத்தறியேன் எனக்கருளக் கருது வாயே