புலங்கொள் கொடிய மனம்போன போக்கில் போகா தெனைமீட்டு நலங்கொள் கருணைச் சன்மார்க்க நாட்டில் விடுத்த நற்கொடியே வலங்கொள் ஞான சித்திஎலாம் வயங்க விளங்கு மணிமன்றில் குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக் கொடியே அடியேற் கருளுகவே