புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப் புணர்த்திய புனிதனை எல்லா நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில் நிறுத்திய நிமலனை எனக்கு மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா வாழ்க்கையில் வாழவைத் தவனைத் தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத் தந்தையைக் கண்டுகொண் டேனே