புலையள வோஎனும் நெஞ்சக னேன்துயர்ப் போகமெட்டு மலையள வோஇந்த மண்ணள வோவந்த வானளவோ அலையள வோவன்று மன்றுணின் றோங்கும் அருமருந்தே இலையள வோஎனுந் தேவே அறிந்தும் இரங்கிலையே