புலையே புரியும் மனம்போன போக்கே அல்லால் புண்ணியநல் நிலையே அறியேன் சிறியேனுக் கருளல் அழகோ நிறைந்தகுண மலையே மணியே மருந்தேஎன் வாழ்வே எல்லாம் வல்லோனே கலையே கருதும் கழலுடையாய் அருளா மையும்நின் கடன்அன்றே