புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில் தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த தயவிலாச் சழக்கனேன் சழக்கர் உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில் உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன் இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன் என்னினும் காத்தருள் எனையே