புல்ல னேன்புவி நடையிடை அலையும் புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய அல்லல் என்பதற் கெல்லைஒன் றறியேன் அருந்து கின்றனன் விருந்தினன் ஆகி ஒல்லை உன்திருக் கோயில்முன் அடுத்தேன் உத்த மாஉன்தன் உள்ளம்இங் கறியேன் செல்லல் நீக்கிய ஒற்றியம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே