புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார் புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார் கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால் கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும் நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை நன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும் வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே