புல்லவா மனத்தேன் என்னினும் சமயம் புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம் சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர் சொப்பனத் தாயினும் நினையேன் கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன் கனகமா மன்றிலே நடிக்கும் நல்லவா எல்லாம் வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே