பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும் காணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே கருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன் மாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும் மனமுருகி இருகண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய் ஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன் எனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே