பூதநிலை முதற்பரம நாதநிலை அளவும் போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப் பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே