பூதமே அவைதோன்றிப் புகுந்தொ டுங்கும் புகலிடமே இடம்புரிந்த பொருளே போற்றும் வேதமே வேதத்தின் விளைவே வேத வியன்முடிவே அம்முடிவின் விளங்கும் கோவே நாதமே நாதாந்த நடமே அந்த நடத்தினையுள் நடத்துகின்ற நலமே ஞான போதமே போதமெலாம் கடந்து நின்ற பூரணமே யோகியருள் பொலிந்த தேவே