பூதம் நும்படை எனினும்நான் அஞ்சேன் புதிய பாம்பின்பூண் பூட்டவும் வெருவேன் பேதம் இன்றிஅம் பலந்தனில் தூக்கும் பெருமைச் சேவடி பிடிக்கவும் தளரேன் ஏதம் எண்ணிடா தென்னையும் தொழும்பன் என்று கொள்விரேல் எனக்கது சாலும் சூத ஒண்பொழில் ஒற்றியூர் உடையீர் தூய மால்விடைத் துவசத்தி னீரே