பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா போகவெளி மாமாயா யோகவெளி புகலும் வேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா நாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா நவில்கின்ற வெளிகளெலாம் நடிக்கும்அடி வருந்த ஏதஎளி யேன்பொருட்டா நடந்தென்பால் அடைந்தே என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே