பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து மாத்தகைய பெருஞ்ஸோதி மணிமன்றுள் விளங்கும் வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள் ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன் தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில் துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி